நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை

வாஷிங்டன்: 2023-24ம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், “இந்திய நிதியமைச்சகம் நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும். வௌிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மூலதன ஆதாய வரி சீர்திருத்தங்களை எளிமையாக்க வேண்டும். இதனால் உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இந்தியா பெற முடியும். அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும்” என்று அமெரிக்க தொழில்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: