உணவு சப்ளை செய்யும் வீடுகளில் பெண்களிடம் அத்துமீறும் ஆன்லைன் டெலிவரி பாய்: நெருங்கி பழகி கடத்திச்சென்று பலாத்காரம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உணவு சப்ளை செய்யும் வீடுகளில் இளம்பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களை கடத்தி பலாத்காரம் செய்து வந்த சம்பவத்தில் ஆன்லைன் டெலிவரி பாயை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கமலேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் அகில் (21). ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி திருவனந்தபுரம் அருகே உள்ள விதுரா பகுதியைச் சேர்ந்த 20 வயதான ஒரு இளம்பெண் திடீரென மாயமானார். இது குறித்து அவரது பெற்றோர் விதுரா போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த இளம்பெண்ணின் செல்போன் எண்ணை வைத்து நடத்திய பரிசோதனையில் அவர் எர்ணாகுளத்தில் இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் எர்ணாகுளத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அங்குள்ள ஒரு லாட்ஜில் அந்த இளம்பெண் இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தினர். ஆன்லைன் டெலிவரி  பாய் அகில் தன்னை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்ததாக இளம் பெண் போலீசில் கூறினார். இதையடுத்து போலீசார் அகிலை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் இவர் இதே போல உணவு டெலிவரி செய்யும் வீடுகளில் இளம்பெண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களை கடத்தி பலாத்காரம் செய்தது தெரியவந்தது. கடந்த இரு வருடங்களுக்கு முன் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்த  ஒரு இளம்பெண்ணை இவர் கடத்திச் சென்றார். இதன் பின் அந்தப் பெண்ணையே அகிலுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

Related Stories: