முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது திருமணம் ெசய்து கொண்ட பெண் அவருடன் வாழ பிடிக்காமல் தனது மாமனாரை திருமணம் செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் பாதல்கஞ்ச் கோட்வாலி அடுத்த சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்த கைலாஷ் யாதவ் (70) என்பவர்,  பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தின் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவரது   மூன்றாவது மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு பூஜா (28) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணமான சிறிது காலத்திலேயே பூஜாவின் கணவன் இறந்துவிட்டார். அவருக்கு  அவரது பெற்றோர் இரண்டாவது திருமணத்தை  செய்து வைத்தனர். ஆனால் அந்த குடும்பமும் பிடிக்கவில்லை என்று கூறி முதல் கணவன் வீட்டிற்கே பூஜா திரும்பினார்.

கணவர் இல்லாத வீட்டில் தனிமையை உணர்ந்த பூஜா, தனது மாமனாரை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், இரு குடும்பத்தார் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் குறித்த செய்தி, உத்தரபிரதேசத்தில் முக்கிய விவாத பொருளாக மாறியுள்ளது. அதன் பின்னர் இந்த திருமணத்தின் படங்கள் சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து, போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இவர்களது திருமணமானது, இரண்டு நபர்களுக்கு இடையிலான பரஸ்பர விவகாரம் என்றும், ஏதேனும் புகார் அளித்தால் மட்டுமே போலீசார் விசாரிக்க முடியும் என்று அவர்கள் கூறினர்.

Related Stories: