ஜெப ஆலயத்திற்கு வெளியே ஜெருசலேமில் 7 பேர் சுட்டுக் கொலை

ஜெருசலேம்: ஜெருசலேம் ஜெப ஆலயத்திற்கு வெளியே மர்ம நபர் நடித்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 70 வயது மூதாட்டி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே கடந்த சில  நாட்களுக்கு முன் நடந்த மோதலில் 9 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த  சம்பவத்திற்குப் பிறகு, தாங்கள் எந்த அப்பாவியையும் கொல்லவில்லை என்றும்,  இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதப் படையைப் பிடிக்க  ஜெனினுக்குச் சென்றோம் என்றும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.

இந்நிலையில் ஜெருசலேம் ஜெப ஆலயத்திற்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 70 வயது மூதாட்டி உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர்; 10 பேர் காயமடைந்தனர். பின்னர், இந்த தாக்குதலை நடத்தியவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தகவலை இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை பயங்கரவாத தாக்குதல் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.

Related Stories: