அமெரிக்காவில் மேலும் ஒரு கறுப்பினத்தவர் கொலை: காவல்துறையினர் சரமாரியாக தாக்கி கொலை செய்த வீடியோ வெளியீடு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கறுப்பினத்தவரை காவல்துறையினர் சிலர் சரமாரியாக தாக்கி கொலை செய்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் கடந்த 6-ம் தேதி வழக்கு ஒன்று சதேகத்தின் பெயரில் நிக்கொலஸ் என்ற கறுப்பினத்தவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்ய முற்பட்டனர். இதற்கு பயந்து சாலையில் ஓடிய அவரை காவல்துறையினர் சிலர் மடக்கி பிடித்தனர்.

பின்னர், அவரை சாலையில் வைத்து காவல்துறையினர் சிலர் சரமாரியாக தாக்கிய நிலையில் படுகாயமடைந்த அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நிகோலஸ் கொடூரமாக தாக்கப்பட்ட காட்சிகள் காவல்துறையினரின் சீருடையில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகி வெளியாகி உள்ளது. இந்த கொலை வழக்கில் கறுப்பினத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கறுப்பினத்தரவரின் பெற்றோரை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.  

Related Stories: