இலங்கை நீதிமன்றம் உத்தரவால் சர்ச்சை: தமிழக மீனவர்களின் 3 படகுகளை அரசுடைமையாக்கியது இலங்கை

கொழும்பு: தமிழக மீனவர்களின் 3 படகுகளை அரசுடைமையாக்கிய இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பகுதிகளில் இருந்து 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் மீன் பிடிக்கச்சென்ற 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன. இந்த படகுகள் மீதான விசாரணை யாழ்ப்பாணம் மற்றும் ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆஜராவதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் 14 பேர் கொண்ட மீனவ குழுவினர் யாழ்ப்பாணம் சென்றனர். அந்த மீனவர்கள் நேற்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி 17 படகுகளில் 4 படகுகள் மீதான விசாரணை முடிந்த நிலையில் இதற்கான தீர்ப்பு வருகின்ற 31-ம் தேதி பிறப்பிக்கப்படும் என்றும் 10 படகுகள் மீதான வழக்குகளை மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார். 3 விசை படகுகளை இலங்கை அரசுடைமையாக்குவதாகவும் நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டார்.  

Related Stories: