சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடித்தபோது பெண் இறந்த சம்பவ தொடர்பாக பணிகளை நிறுத்த சென்னை மாநகராட்சி நோட்டிஸ்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மசூதி அருகே சுவர் இடிக்கும் பணியின்போது இடிபாடுகள் விழுந்து பெண் வங்கி ஊழியர் பலியானார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் ஒருவர் சிகிச்சைக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணாசாலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜேசிபி உரிமையாளர் ஞானசேகர், ஓட்டுநர் பாலாஜி, மேற்பார்வையாளர் பிரபு ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டிடத்தை இடித்தபோது பெண் இறந்த சம்பவ தொடர்பாக பணிகளை உடனடியாக நிறுத்த சென்னை மாநகராட்சி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. கட்டிடத்தை கிடைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். மறு உத்தரவு வரும் வரை பணியை தொடங்க கூடாது என நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

கட்டிடத்தின் உரிமையாளருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்பியுள்ளனர். முன் அனுமதி பெற்றுத்தான் கட்டிடத்தை கிடைக்கும் பணி நடந்துள்ளது என்று உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கட்டிடத்தை இடிக்கும்போது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: