கீழ்ப்பாக்கம் கார்டன் 2வது சாலையில் போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை 2வது தெருவில் புதியதாக பாலம் கட்டுமான பணி தொடங்க உள்ளதால் வரும் 30ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: கீழ்ப்பாக்கம் கார்டன் இரண்டாவது சாலை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. நியு ஆவடி சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் 2வது தெரு வழியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை நோக்கி செல்ல கூடிய வாகனங்கள், ஆஸ்பிரின் கார்டன் 1வது தெரு சந்திப்பில் நேராக நியு ஆவடி சாலை வழியாக செல்லலாம், (ஆஸ்பிரின் கார்டன் 1வது தெருவை நோக்கி இடது புறம் திரும்ப அனுமதியில்லை.

கீழ்பாக்கம் கார்டன் சாலையிலிருந்து கீழ்ப்பாக்கம் 2வது தெரு வழியாக ஆஸ்பிரின் கார்டன் நோக்கி செல்ல கூடிய வாகனங்கள், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை டெய்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து நேரடியாக கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, நியு ஆவடி சாலை மற்றும் ஆஸ்பிரின் கார்டன் முதல் தெரு வழியாக செல்லலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: