பன்முனை விற்பனை பிராண்டாக மாறும் ஜெ.எப்.ஏ பர்னிச்சர்

சென்னை: ஜெ.எப்.ஏ.பர்னிச்சர் 85 வருட பாரம்பரியம் மிக்க ஒரு நிறுவனம். வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து பர்னிச்சர்களும் இங்கு மொத்தமாக கிடைக்கிறது. இந்நிலையில், தற்போது ‘ஆம்னி சேனல்’ என்று அழைக்கப்படும் பன்முனை விற்பனை பிராண்டாக மாறியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை தரும் இந்த புதிய முயற்சிக்கு ஜெ.எப்.ஏ 360 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்பெல்லாம் ஷோரூமில் வைக்கப்பட்ட பர்னிச்சர்களை மட்டும் தான் நம்மால் பார்க்க முடியும். ஆனால் இப்போது டிஜிட்டல் முறையில் ஷோரூமில் இல்லாத பர்னிச்சர்களையும் காண முடியும். அதற்காக ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கேட்லாக்குகளை ஒன்றிணைத்துள்ளது.

அது மட்டுமில்லாது 3டி வெர்ச்சுவல் ஷோரூம் ஒன்றையும் உருவாக்கி உள்ளது. வாடிக்கையாளரின் கண் முன் இருப்பது 6500+ படுக்கை அறை பர்னிச்சர், 5000+ லிவிங் ரூம் பர்னிச்சர், 3500+ டைனிங் ரூம் பர்னிச்சர், 1000+ வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் 1800+ ஆபீஸ் பர்னிச்சர். வீட்டின் வண்ணங்களுக்கு பொருத்தமாக 1000+ வண்ணங்களை வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். ஜெ.எப்.ஏ. 360 தொடக்க விழா, அடையாறு ஷோரூமில் நடந்தது. இதில் சுஹைல் சட்டார் (இயக்குனர் - ஹாஸ்ப்ரோ க்ளோதிங்), பாலச்சந்தர் (இயக்குனர் - ஜூனியர் குப்பண்ணா), ஆனந்த் நெர்குணம் (VP-ZOHO நிறுவனம்) ராம்குமார் ராஜேந்திரன் (இயக்குனர், ஜெ.எப்.ஏ) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: