அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி கோலப் போட்டியில் வென்ற பெண்களுக்கு தங்க நாணயம்: ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்

ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, 166வது வார்டு பி.வி.நகரில் நடந்த கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா, நங்கநல்லூர் எம்ஜிஆர் சாலை அருகே நடைபெற்றது. ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளரும், மண்டல குழு தலைவருமான என்.சந்திரன் தலைமை வகித்தார். ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், பகுதி நிர்வாகிகள் சுந்தர்ராஜன், ஆர்.பாபு, ரமேஷ், பி.ஆர்.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 166வது வார்டு வட்ட திமுக செயலாளர் இ.உலகநாதன் வரவேற்றார்.

விழாவில், திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு போட்டியில் முதல் இடத்தை பிடித்த பெண்ணிற்கு 5 கிராம் தங்க நாணயமும், 2வது இடம் பெற்றவருக்கு 3 கிராம் தங்க நாணயமும், 3வது இடம் பிடித்தவருக்கு 2 கிராம் தங்க நாணயம் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட 900 பேருக்கு சேலையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட  இலக்கிய அணி செயலாளர் ஜெயராம மார்த்தாண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.எஸ்.கே.இப்ராஹிம், ஆர்.டி.பூபாலன், மாமன்ற உறுப்பினர்கள் சாலமோன், துர்காதேவி நடராஜன், தேவி யேசுதாஸ், பூங்கொடி ஜெகதீஸ்வரன், அமுத பிரியா, வட்ட செயலாளர்கள் ஜெ.நடராஜன், கே.பி.முரளி கிருஷ்ணன், வேலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: