பள்ளிகள் இன்று செயல்படும்: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: விடுமுறை நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக் கிழமைகளில் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை  அறிவித்ததை அடுத்து சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  இன்று அனைத்து வகை பள்ளிகள் செயல்படும். வட கிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்துதமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்தபடி இருந்தது. அதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை வெள்ள பாதிப்பு  ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கன்னியாகுமரி, சீர்காழி பகுதிகளில் 300 மிமீ வரை கொட்டித் தீர்த்தது. அதனால், தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவியரின் கல்வி பாதிக்கப்படாத வகையில் வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதால், விடுமுறை அறிவிக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் வகையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் சனிக் கிழமைகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இ ருந்தது. அதன்படி சனிக் கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கிறிஸ்துமஸ், பொங்கல் விடுமுறைகள் இடையில் வந்ததாலும், மேலும் பணி நாட்களை ஈடுசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், சனிக் கிழமைகளில் பள்ளிகள் திறப்பது கட்டாயமாகியுள்ளது. இதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில்  இன்று அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளும் இயங்கும். மேலும், அந்தந்த மாவட்டங்களில் விடப்பட்ட விடுமுறைகளுக்கு ஏற்ப பணி நாட்களை ஈடு செய்ய வேண்டும் என்பதால் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: