ரூ.4 லட்சம் மரங்களை வெட்டியதில் குன்னூர் நகராட்சி ஆணையர் மீது புகார்: ஆணையர் மன்னிப்புக் கேட்டதாக குன்னூர் நகராட்சித் தலைவர் தகவல்

நீலகிரி: குன்னூர் நகராட்சியில் ரூ.4 லட்சம் மதிப்பிலான மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டது தொடர்பாக நகராட்சி ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. குன்னூர் நகராட்சியில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் உழவர் சந்தை பகுதியில் ரூ.4 லட்சம் மதிப்புள்ள மரங்கள் வெட்டப்பட்டது குறித்து மன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். நகராட்சி தலைவரின் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டதாகவும் இதில் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்திக்கு தொடர்பு இருப்பதாகவும் உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

அப்போது கூட்டத்தை விட்டு நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி வெளியேறியதால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்து பேட்டியளித்த நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக தம்மிடம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார். என்றாலும், ஆணையர் கிருஷ்ணமூர்த்தி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைக்க உள்ளதாகவும் குன்னூர் நகராட்சி தலைவர் ஷீலா கேத்ரின் கூறியுள்ளார்.

Related Stories: