மறைந்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி..!!

சென்னை: மறைந்த திரைப்பட சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். முரட்டுக்காளை ரயில் சண்டை உள்ளிட்ட எண்ணற்ற சண்டைக் காட்சிகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். சண்டைப் பயிற்சியில் தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கி அதில் வென்றவர் ஜூடோ ரத்னம் என ரஜினிகாந்த் கூறினார். ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்னம் நேற்று காலமான நிலையில் அவரது உடல் வடபழனியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: