சென்னை ஐஐடியில் இன்று ‘சாஸ்த்ரா’ விழா தொடக்கம்: ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவிப்பு

சென்னை: சென்னை ஐஐடியின் ‘சாஸ்த்ரா’ எனும் தொழில்நுட்ப திருவிழா இன்று முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது என ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் புதிய அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை மாணவர்கள் கண்டுபிடிக்க ஊக்கப்படுத்தும் தொழில்நுட்ப திருவிழாவான சாஸ்த்ரா விழா இன்று தொடங்கி 29ம் தேதி வரை 4 நாட்கள் சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஐஐடி இயக்குநர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது:  

சென்னை ஐஐடியில் சாஸ்த்ரா தொழில்நுட்ப விழா 23வது ஆண்டாக நடைபெற உள்ளது. இது கல்வி நிறுவனத்துக்கும், தொழில்துறைக்கும் இணைப்பு ஏற்படுத்தி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஊக்கப்படுத்துகிறது. இந்த ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு உலக நாடுகளுக்கு முன்மாதிரியான விண்வெளி ஆராய்ச்சியினை மாணவர்கள் மேற்கொள்ள உதவும்.

இதேபோல் ஆடை தயாரிப்பில் சுற்றுச்சூழலிற்கு பதிப்பில்லாத ஆடை உற்பத்தி முறை குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த விழா நடைபெறும் நான்கு நாட்களும், சென்னை ஐஐடி-யில் என்ன இருக்கிறது, தொழில்நுட்பம் சார்ந்து நிறுவனம் எப்படி செயல்படுகிறது மற்றும் நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவச பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதே போல் பள்ளி, கல்லூரிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  

ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், அதன் கல்வி மற்றும் கலாசார நிகழ்வு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கல்வி சார்ந்து  ரோல் ஆப் டிஜிட்டல் டெக்னாலஜி இன் எஜூகேஷன் என்ற தலைப்பில் மொத்தம் 29 நாடுகளில் இருந்து கலந்துகொள்ள உள்ளனர். இந்த கருத்தரங்கம் ஜனவரி 31ம் தேதி ஐஐடியில் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: