இடைத்தேர்தல் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்: சொல்கிறார் சசிகலா

தஞ்சாவூரை அடுத்த முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் நேற்று சசிகலா கலந்து கொண்டார். பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘தமிழுக்காக, தமிழினம் என்கிற காரணத்திற்காக நாடு வேறு, இடம் வேறு என்ற கணக்கு இல்லை. தமிழர் ஒன்றுதான், ஒற்றுமையை குறிக்கும். நாடாளுமன்ற தேர்தல் மற்றும் கூட்டணி குறித்து ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்.

ஈரோடு இடைத்தேர்தல் என்பது அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். எந்த மாதிரியான தாக்கம் என்பது பொறுத்திருந்து பார்ப்போம். இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். விருந்தோம்பலை கொண்டாடும் மக்கள் தமிழக மக்கள். அப்படி இருக்கும்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை தவிர்ப்பது தமிழ்நாட்டிற்கு அழகல்ல’ என்று தெரிவித்தார்.

Related Stories: