நேபாள பிரதமர் முன்பாக வாலிபர் தீக்குளிப்பு: சிகிச்சை பலனின்றி சாவு

காத்மாண்டு: நேபாள நாடா ளுமன்றத்தில் இருந்து பிரதமர் பிரசண்டா வெளியே வந்த போது நேற்று தீக்குளித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

நேபாள நாட்டின் புதிய பிரதமராக கடந்த டிசம்பர் மாதம் சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த புஷ்ப கமல் தாஹால் என்ற பிரசண்டா தேர்வு செய்யப்பட்டார். அவர் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது உடலில் டீசலை ஊற்றி தீக்குளித்தார். உடனடியாக அந்த பகுதியிலிருந்து பிரதமர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தீக்குளித்து நபரை மீட்டு பாதுகாப்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்கொலைக்கு முயன்ற நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் விசாரணையில் தீக்குளித்த நபர், இல்லம் மாவட்டத்தை சேர்ந்த பிரேம் பிரசாத் ஆச்சார்யா (37) எனத் தெரிய வந்துள்ளது. ஆனால் பிரதமர் வெளியேறும் நேரத்தில் அவர் எதற்காக தீக்குளித்தார் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: