மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் மரியாதை: திமுகவினருடன் ஊர்வலமாக சென்றார்

தண்டையார்பேட்டை: சென்னை மூலக் கொத்தளத்தில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவினருடன் ஊர்வலமாக சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள தாளமுத்து நடராஜன் டாக்டர் தர்மாம்பாள் நினைவு இடத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மூலக்கொத்தளம் சந்திப்பில் இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக நடந்து சென்று, மூலக்கொத்தளத்தில் உள்ள தாளமுத்து நடராசன் டாக்டர் தர்மாம்பாள் ஆகியோர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, தியாகிகளின் வீரவணக்க பேனரை  கையில் பிடித்தபடியும், மொழிப்போர் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளை நினைவுகூர்ந்தபடியும் கோஷம் எழுப்பியபடியும் சென்றனர். நிகழ்ச்சியின்போது, மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ, சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ஐட்ரீம் மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், ஆர். டி. சேகர், மாநில வர்த்தக அணி இணை அமைப்பாளர் பாண்டிச்செல்வம், மண்டலக்குழு தலைவர்கள் நேதாஜி கணேசன், ராமுலு, பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ்,

செந்தில்குமார், ஜெபதாஸ் பாண்டியன், லட்சுமணன், வட்டசெயலாளர்கள் கவுரீஸ்வரன், பாலன், வழக்கறிஞரணி அமைப்பாளர் மருது கணேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோவிந்தசாமி மற்றும் திமுகவினர் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Related Stories: