சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது: போலீசார் சோதனை

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள், குடியரசு தினம் விழாவையொட்டி பல்வேறு இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள், அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து இருக்கிறார்கள். குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் மட்டும்மல்லாமல் சென்னையில் இருக்கக்கூடிய எழும்பூர் மற்றும் சென்னை விமானம் நிலையம் ஆகிய இடங்களில் பலத்த பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் முக்கிய இடங்களாக இருக்கக்கூடிய மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், உள்ளிட்ட ரயில்நிலையங்களில் போலீசார் 24 மணிநேரமும் கண்காணிக்கக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது, அதே போன்று சென்ட்ரல் ரயில் நிலையங்களில் 24 மணிநேரமும், வரக்கூடிய 2 நாட்கள் மட்டும் பலத்த கண்காணிப்பு திட்டம் தீவிரம் படுத்தியுள்ளனர். சென்னையில் மட்டும் 6,000திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும் 1,500 மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர், இங்கு வரக்கூடிய பயணிகள் மற்றும் அவர்கள் கொண்டுவரக்கூடிய பொருட்கள், மற்றும் அவர்களுடைய பைகள், மற்றும் பார்சல் இறக்கக்கூடிய இடங்களில் போலீசார் சோதனை தீவிரம் படுத்தி இருக்கின்றனர். இங்கு வரக்கூடிய பயணிகளிடம் மோப்ப நாய்களை கொண்டு சோதனை செய்து வருகின்றார்கள். அதுமட்டுமின்றி அங்கு இருக்கக்கூடிய சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு பரிசோதித்து விட்டு உள்ளே அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

ஏதேனும் சந்தேகம் படக்கூடிய வகையில் ஏதேனும் இருந்தால் உடனடியாக ரயில்வே போலீசார் தகவல் தெரிவிக்கக்கூடிய தொடர்பு எண்ணை வெளிட்டு இருக்கிறார்கள் 1512 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கின்றார்கள், அதை போன்று ஏதேனும் தகவல் தெரிந்தால் வாட்ஸ்அப் எண்ணை தொடர்புகொள்ள 9962500500 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.     

Related Stories: