திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு உதவுவோம்: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் இளங்கோவன் வெற்றிக்கு உதவுவோம் என ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். நாடளுமன்ற தேர்தலுக்கான நிலைப்பாட்டை அப்போது தெரிவிப்போம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரிப்பது என்பது பரந்த நோக்கம் .ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வெற்றி பெற செய்து மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும் என கூறினார்.

Related Stories: