பிப்27-ல் இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

ஈரோடு: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. ஈரோடு கிழக்கு ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது ஈரோடு மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. பிப்27-ல் இடைத்தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி தேர்தல் பணிமனை திறக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சியினர் ஒன்றிணைந்து பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அமைச்சர்கள் க.முத்துசாமி, செந்தில் பாலாஜி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவெரா(46), 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு முதன்முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார். மிகவும் துடிப்போடு செயல்பட்டு வரும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக பார்க்கப்பட்ட திருமகன் ஈவெராவுக்கு  திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார்.

அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.தமிழ்நாட்டில் பொதுத்தேர்தலுக்கு பிறகு, கொரோனா தாக்கம் காரணமாக அரசியல் களம் பெரும் பரபரப்பு இல்லாத நிலையிலேயே இருந்தது. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக அரசியல் களத்தை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு தொகுயில் திமுக கூட்டணி கட்சியினர் தேர்தல் அலுவலகம் திறந்துள்ளனர்.

Related Stories: