சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றுவதற்காக காங்கிரஸ் சார்பில் 16 எம்எல்ஏக்கள் உள்ளடக்கிய 62 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஆரம்பம் முதலே சூடு பிடித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் திமுக அமைத்துள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பணிக்குழுவை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இந்த தேர்தல் பணிக்குழுவில் 16 எம்எல்ஏக்கள் உள்ளடக்கிய 62 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் காங்கிரஸ் பணிக்குழு தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் எஸ்.ராஜேஷ்குமார், ஜே.ஜி.பிரின்ஸ், விஜயதரணி, ரூபி ஆர்.மனோகரன், . ஜே.எம்.எச். அசன் மவுலானா, ஆர்.எம்.கருமாணிக்கம், ராதாகிருஷ்ணன், ஏ.எம்.முனிரத்தினம், எஸ்.ராஜ்குமார், ஆர்.கணேஷ், ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், எஸ்.பழனி நாடார், எஸ்.டி.ராமச்சந்திரன், எஸ்.மாங்குடி, துரை சந்திரசேகர், ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் உறுப்பினர்களாக காங்கிரஸ் நிர்வாகிகள் டி.திருச்செல்வம், ஈ.பி.ரவி, மக்கள் ஜி.ராஜன், எஸ்.வி.சரவணன், மொடக்குறிச்சி முத்துக்குமார், ஆர்.எம்.பழனிச்சாமி, வி.எஸ்.காளிமுத்து, டாக்டர் அழகு ஜெயபால், எம்.என்.கந்தசாமி, பி.எஸ்.சரவணகுமார், கே. செந்தில்குமார், எல். முத்துக்குமார், செங்கம் ஜி.குமார், எம்.பி.ரஞ்சன்குமார், எம்.லெனின் பிரசாத், டி.ஏ.நவீன், மகாத்மா சீனிவாசன், குங்பூ எஸ்.எக்ஸ்.விஜயன், மா.சின்னதம்பி, வீ.மகேஷ்வரன், சாரதா தேவி, வி.எம்.சி. மனோகரன், ஆர்.கிருஷ்ணன், கே. தென்னரசு, ப.கோபி, என்.கே.பகவதி, எஸ்.கே.அர்த்தனாரி, ஏ.பி.பாஸ்கர், சி.எஸ்.ஜெயக்குமார், பி.ஏ.சித்திக், பி.செல்வகுமார், இ.ஆர். ராஜேந்தின், ராஜேஷ் செல்லப்பா, ஜாபர், விஜய பாஸ்கர், ஆர்.காந்தி, எஸ்.தீபா, கே.ஏ.கானப்பிரியா, சூர்யா சித்திக், ஜவகர், என். ஆரீப் அலி, எஸ்.முகம்மது யூசுப், கீழ்பவானி கே.எஸ்.பொன்னுசாமி, கே.ராஜா, இ.வி.மாரியப்பா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.