தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா தற்கொலை

ஐதராபாத்: டோலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகர் சுதீர் வர்மா. இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுதீர் வர்மா,  ‘குண்டனப்பு பொம்மை’ என்கிற தெலுங்கு படத்தில், ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக லைஃப் இஸ் பியூட்டிபுல் புகழ் சுதாகர் கோமகுலா நடித்துள்ளார். அப்படத்தை தொடர்ந்து செகண்ட் ஹேண்ட் மற்றும் ஷூட் அவுட் அட் அலேரு ஆகிய படங்களிலும் சுதிர் வர்மா நடித்துள்ளார்.

தற்போது வரை, நடிகர் சுதீர் வர்மாவின், தற்கொலைக்கு என்ன பிரச்னை என்பதை அவரது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்றாலும், தனிப்பட்ட பிரச்னை தான் இவரின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்று தெரிகிறது.சுதீர் தற்கொலை குறித்த தகவல், டோலிவுட் திரையுலகை சேர்ந்த அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே போல், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் இவருடைய தற்கொலைக்கு தங்களின் இரங்கலை தெரிவித்துவருகிறார்கள். போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: