வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை வழுக்கல் பாறையில் தடுப்பணை சுவர் கட்ட வேண்டும்-சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே தாணிப்பாறை வழுக்கல் பாறையில் தடுப்பணை சுவர் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை பவுா்ணமிக்கு மலா மூன்று நாட்கள், பிரதோசத்திற்கு இரண்டு நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த சிலநாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தற்போது வரை மலை அடிவாரமான தாணிப்பாறை வழுக்கல் பாறை வழியாக தண்ணீர் செல்கிறது.

தாணிப்பாறை வழுக்கல் பாறையில் தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு இருந்தது. மழை பெய்யாத காலங்களில் வனவிலங்குகள் தடுப்பணையில் உள்ள தண்ணீரை குடித்து செல்வதற்காக கட்டப்பட்டது. அந்த தடுப்பனைச்சுவர் சேதமடைந்து கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சேதமடைந்த தடுப்பனைச் சுவற்றை கட்டாமல் விட்டதால் மழை பெய்து அதிகமாக தண்ணீர் வரும் காலங்களில் பாறைகளையும் தண்ணீரில் உருட்டிச் செல்கிறது. தற்போது தடுப்பணை சுவர் கட்டாத நிலையில் அந்த பகுதி வழியே சிலர் கீழே இறங்கி ஆபத்தை உணராமல் குளித்து வருகின்றனர். உடனடியான தடுப்பணைச்சுவர் கட்டி தண்ணீர் தேக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: