சென்னை கொருக்குப்பேட்டை முதல் வண்ணாரப்பேட்டை வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்க கோரிக்கை: மக்கள் சிரமம்

சென்னை: சென்னை அருகே கொருக்குப்பேட்டை ரயில்நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை பகுதியை இணைக்க உயர்மட்ட பாலம் அவசியம் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றார்கள். கொருக்குப்பேட்டை ரயில்நிலையித்தில் இருந்து வண்ணாரப்பேட்டை, சென்ட்ரல், எழும்பூர், பாரிமலை உள்ளிட்ட இடங்களுக்கு இங்கு இருக்கக்கூடிய வழியாக இங்கு இருக்கக்கூடிய பகுதி மக்கள் கடந்து செல்கின்றார்கள். கொருக்குப்பேட்டை ரயில்நிலையத்தில் ரயில்வே கேட் அமைந்து இருக்கிறது ஆனால் இந்த இடத்தில் இருந்து  கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் பேரும் சிரமம் இருந்து வருகிறது.

இந்த பகுதியில் நீண்ட காலமாகவே, 15 ஆண்டு காலமாகவே இந்த இடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அவசியம் என இங்கு இருக்கக்கூடிய பகுதி மக்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தி வருகின்றனர். ரயில்வே கேட் அவ்வப்போது மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்துருக்கவேண்டிய நிலை இங்கு இருக்கக்கூடிய மக்களுக்கும் அதேபோன்று ரயில்வே பயணிகள் பொதுமக்கள் அனைவருக்குமே பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள்.

அதை போன்று மிகவும் முக்கியமான நேரத்தில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளகிறுகிறார்கள். போக்குவரத்து நெரிசல், ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நேரம் நிற்கவேண்டிய சூழல் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. அதே போன்று விபத்துகள் அடிக்கடி நேரக்கூடிய சுழலாகவும் இந்த இடம் இருக்கிறது. எனவே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி வருகிறார்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து காவல் துறை இல்லாத நிலை இருந்துவருகிறது, இதனால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமம் ஏற்படுகின்றது.    

Related Stories: