திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோவில் திருவிழாவில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் ஆடி உற்சாகம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கோவில் திருவிழாவில்ஏராளமானோர் வள்ளி கும்மியாட்டம் நடத்தியது பத்தர்களை பரவசம் படுத்தியது. மடவிலகத்திலும் உள்ள ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் வரும் 27ம் தேதி குடமுழுகும் விழா நடை பெறவுள்ளது. கோவில் விழாக்களில் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் ஒவ்வொரு நாட்களும் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் வள்ளி கும்மியாட்ட கலைக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக குழந்தைகள், பள்ளி மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. பின்னர் மாணவர்களின் யோகாசன நிகழ்ச்சிகளும் நடைபெற்று பார்வையாளர்களை ஊக்கவித்தது.  

Related Stories: