தீவுத்திடல் பொருட்காட்சியில் பொதுமக்களை பிரமிக்க செய்யும் மெட்ரோ ரயில் நிறுவன அரங்கம்: மெட்ரோ நிர்வாக இயக்குனர்கள் பெருமிதம்

சென்னை: தீவுத்திடல் பொருட்காட்சியில் பொதுமக்கள் பிரமிப்படையும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாக இயக்குனர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பாக 47வது அகில இந்திய சுற்றுலா பொருட்காட்சி நடந்து வருகிறது. இந்த பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் பல்வேறு அரங்கங்களும், அரசு சார்ந்த நிறுவனத்தின் அரங்கங்களும் தனியார் அரங்கங்களும் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த சுற்றுலா பொருட்காட்சியில் நந்தனத்தில் உள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக கட்டிடம் கண்கவர் அரங்கமாக பொதுமக்களின் பார்வைக்கு இடம்பெற்றுள்ளது. இதனை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி மற்றும் பிரசன்ன குமார் ஆச்சார்யா பார்வையிட்டனர். பின்னர் ராஜேஷ் சதுர்வேதி பேசியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலக அரங்கத்தில் உள்ளே செல்வதற்கு மெட்ரோ ரயில் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் வழியாக உள்ளே சென்று, அரங்கத்தை பார்வையிட்டு வெளியில் வரும்போது சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவம், தோண்டும் இயந்திரம் எப்படி இயங்குகிறதோ அதேபோல் மாதிரி வடிவம் இயக்கப்பட்டு வருகிறது.

அரங்கின் உள்ளே மெட்ரோ ரயில் பற்றிய பல்வேறு புகைப்படங்கள் சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் திருமயிலை மெட்ரோ ரயில் நிலையத்தின் மாதிரி வடிவமைப்பு அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரி வடிவமைப்பு இங்கு வருகை தரும் பார்வையாளர்கள் மத்தியில் பிரமிப்படைய செய்கிறது. இரவு நேரத்திலும் அரங்கம் மின்னொளியில் கண்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

Related Stories: