எல்பிஜி மையமாகிறது விநாயகபுரம் மயான பூமி 9 மாதங்கள் இயங்காது

சென்னை: மாதவரம்  மண்டலத்தில் உள்ள விநாயகபுரம் மயான பூமியை எல்பிஜி மயானபூமியாக மேம்படுத்த பணிகள் நடைபெற உள்ளதால், பொதுமக்கள் நேர்மை நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு  சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், வார்டு 30க்குட்பட்ட விநாயகபுரம் மயானபூமியில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்தல் மற்றும் அடக்கம் செய்தல் பணிகள் மயான உதவியாளர் மூலம் நடந்து வருகிறது.  

தற்பொழுது, மயானபூமியை பொதுமக்கள் சிரமமின்றி பயன்படுத்துவதற்கு ஏதுவாக எல்பிஜி எரியூட்டு மையமாக மேம்படுத்துவதற்காக  (இன்று) 24.1.2023 முதல் 23.10.2023 வரை (9 மாத காலம்) பணிகள் நடைபெற உள்ளது. எனவே, மேம்பாட்டு பணிகள் நடைபெறும் 24.1.2023 முதல் 23.10.2023 வரையிலான 9 மாத காலத்திற்கு விநாயகபுரம் மயானபூமி இயங்காது. பொதுமக்கள் மேம்பாட்டு பணிகள் நடைபெறும் நாட்களில் திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-65, பேப்பர் மில்ஸ் சாலை, நேர்மை நகர் மயானபூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: