சென்னை: தேசிய சதுரங்கப் போட்டியில் பதக்கம் வென்ற பள்ளி மாணவிகள் அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சிபிஎஸ்இ பள்ளிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் புரூக் பீல்டு இன்டர்நேஷனல் பள்ளியில், தேசிய அளவிலான சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்க போட்டி ஜனவரி மாதம் -14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட சிபிஎஸ்சி பள்ளிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் திருநெல்வேலி பாளையங்கோட்டை வேல்ஸ் வித்யாலயா பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி அஜிஸ்ரீ 14 வயதிற்கு உட்பட்ட தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
