கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் மகாகாளீஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை

உஜ்ஜைன்: கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உஜ்ஜைனில் உள்ள மகாகாளீஸ்வரர் கோயிலில் பிரார்த்தனை செய்தனர்  செய்தனர்.  

இந்தூரில் நாளை நடைபெற உள்ள நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி, 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற மகாகாளீஸ்வரர் கோயிலுக்கு சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் சென்று ரிஷப் பண்ட் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

இதுகுறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில்; ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்தோம், அவரது கம்பேக் எங்களுக்கு மிகவும் முக்கியமானது, நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை பொறுத்த வரையில் தொடரை ஏற்கெனவே 2-0 என்ற கணக்கில் நாம் வென்றுள்ளோம். இறுதிப் போட்டியை எதிர்கொள்ள ஆவலுடன் உள்ளேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

Related Stories: