குத்தாலம் அருகே தேரழுந்தூரில் தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா தேரழுந்தூரில் கடந்த ஓராண்டாக தெரு நாய்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.கடைவீதியில் கூட்டமாக நாய்கள் சுற்றி திரிவதால் அப்பகுதியை முதியவர்களும், மாணவர்களும் அச்சத்துடனேயே நடந்து செல்கின்றனர். இந்த நாய்கள் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவரை திடீரென பின்தொடர்ந்து விரட்டிச் சென்று பீதிக்கு உள்ளாக்குகின்றன.

கடந்த வாரத்தில் நாய்கள் விரட்டிச் சென்று கடித்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் நாய்களின் நடமாட்டத்தால் இப்பகுதியில் சிறுசிறு விபத்துகளும் நேரிடுகின்றன.இதேபோல கோமல் கடை வீதியிலும், நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, உடனடியாக ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: