ஈரோடு கிழக்கு தொகுதியில் களமிறங்க தயக்கம் அழுத்தம் கொடுக்கும் இபிஎஸ் தெறித்து ஓடும் மாஜி அமைச்சர்: கட்சி பிளவு, கோஷ்டி பூசல், சின்னம் இல்லாததால் அச்சம்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அதிமுக எடப்பாடி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என தெரிகிறது. இரு அணியினரும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட தயாராகி வருகின்றனர். இதற்காக கூட்டணி கட்சியினரை தனித்தனியாக சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர். ஆனால், யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு எடுக்க முடியாமல் கூட்டணி கட்சிகள் திணறி வருகின்றன.

அதிமுக இபிஎஸ் தரப்பில் முன்னாள் அமைச்சரும், ஈரோடு மாநகர செயலாளருமான கே.வி.ராமலிங்கம் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. ஆரம்பத்தில் போட்டியிட விரும்பிய ராமலிங்கம் தற்போது கட்சியில் பிளவு, கோஷ்டி பூசல், சின்னம் பறிபோகும் சூழல் போன்ற பரிதாப நிலைமையை உணர்ந்து தப்பித்தால்போதும் என்று பயந்து ஒதுங்குவதாக கூறப்படுகிறது.

கடந்த 2011ம் ஆண்டு ஈரோடு மேற்கு தொகுதியில் போட்டியிட்டு விட்டு, தற்போது தொகுதி மாறி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எண்ணி மாஜி அமைச்சர் ராமலிங்கம் போட்டியிட தயங்கி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக தன்னுடைய தலைமையின் கீழ்தான் வலுவாக உள்ளது என்பதை நிரூபிக்க இத்தேர்தல் பயன்படும் என்பதால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்து வருவதால் மாஜி அமைச்சர் ராமலிங்கம் திரிசங்கு நிலையில் உள்ளார்.

Related Stories: