சென்னை: சென்னை பேருந்துகளில் பயணிக்க மாதாந்திர பயண அட்டைகளை நாளை வரை வழங்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயண அட்டை விற்பனை மையங்களில் ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி முதல் 22ம் தேதி வரை விருப்பம்போல் பயணம் செய்யக்கூடிய ரூ.1000 மதிப்பிலான பயண சலுகை பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டுகின்றன.
