ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு: புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரசும் ஓரிரு நாளில் வேட்பாளரை அறிவிக்க உள்ளது. இந்தநிலையில், அதிமுக எடப்பாடி அணி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வாசனை சந்தித்து ஆதரவு கேட்டனர். அவரும் ஆதரவு தருவதாக அறிவித்தார்.

அதேநேரத்தில், அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து கடந்த இரு நாட்களாக சென்னையில் ஆலோசனை நடந்து வந்தது. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியாக போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு இரட்டை சிலை சின்னம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். இதனிடையே கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணியினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஈபிஎஸ் அணியினர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு ஆதரவு கேட்டு புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியுடன் சந்தித்து பேசினர். புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி  ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், சின்னையா உள்ளிட்டோர் சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூவை ஜெகன் மூர்த்தி; ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு முழு ஆதரவு அளித்து தேர்தல் பணியில் ஈடுபடுவோம். ஓ.பி.எஸ் தரப்பில் இருந்தும் ஆதரவு கேட்டனர். மாலை வருவதாக கூறினார்கள். ஒ.பி.எஸ் நேரிடையாக போட்டியிடுவது பற்றி எனக்கு தெரியாது எனவும் கூறினார்.

Related Stories: