ரஷ்யாவில் உறைபனிக்கு இடையே கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய பழமைவாத கிறிஸ்தவர்கள்

ரஷ்யா: ரஷ்யாவில் உறைபனிக்கு இடையில் பழமை வாய்ந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். ரஷ்யாவின் யாகுட்ஸ் நகரில் கொட்டும் பனியால் நீர் நிலைகள் உறைந்தன. அவற்றை உடைத்து பள்ளம் தோண்டிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் குளிர்ந்த தண்ணீரில் நீராடினர். தண்ணீரில் துளைந்த சிலுவையை கிறிஸ்தவர்கள் தேடி எடுத்தனர். கிரிமியாவில் தெருக்களில் கிறிஸ்துவின் உருவபடத்துடன் திரண்ட கிறிஸ்துவர்கள் பிரார்த்தனை செய்தனர்.  மாஸ்கோ வீதிகளில் இயேசு கிறிஸ்துவின் உருவபடங்களுடன் ஊர்வலமாக சென்ற ஏராளமானோர் சிறப்பு வழிபாடு செய்த பிறகு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தண்ணீரில் குளித்தனர். 

Related Stories: