லீனா மணிமேகலை கைது நடவடிக்கை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: லீலா மணிமேகலையின் காளி ஆவணப்படத்துக்கு எதிராக டெல்லி, உபி, மபி, உத்தரகாண்ட் ஆகிய மாநில காவல் நிலையங்களில் கிரிமினல் சதி, வழிபாட்டு முறைகளில் குற்றத்தை தூண்டுதல், மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தல், அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு  செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட எப்.ஐ.ஆர்களுக்கு எதிராக லீலா மணிமேகலை தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,‘‘லீலா மணிமேகலை மீது பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆர் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.

இனிமேல் கூடுதலாக வழக்கு தொடரப்பட்டாலும் தற்போதைய உத்தரவு அதற்கும்பொருந்தும். இதுகுறித்து ஒன்றிய அரசு, மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதிகள்,‘‘பல்வேறு மாநிலங்கள் பதிவு செய்துள்ள எப்.ஐ.ஆரை ஒன்றிணைத்து லீனா மணிமேகலை விரும்பும் இடத்தில் விசாரணையை தொடர சட்டப்பிரிவு 482ன் கீழ் மனுத்தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கப்படுகிறது எனக்கூறி அடுத்த விசாரணையை பிப்ரவரி 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: