இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய தடை: உச்சநீதி மன்றம்

டெல்லி: இயக்குனர் லீனா மணிமேகலையை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. காளி பட சர்ச்சை போஸ்டர் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு எதிரான இயக்குனர் லீனா மணிமேகலை தொடர்ந்த வழக்கு, மத்திய அரசு, டெல்லி, உத்திர பரிதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் லீனா மணிமேகலை தயாரித்து வரும் குறும்படமான காளி பட போஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் குறிப்பாக  அந்த காளி பட போஸ்டரில் காளி புகைபிடிப்பதுபோல் சர்ச்சை கூறிய போஸ்டர்களை அவர் வெளியிட்டு இருந்தார். இதை தொடர்ந்து மதஉணர்வுகளை புண்படுத்தும் விதமாக தெரிவித்து வழக்கறிஞர் வினித் ஜிந்தால், விஷ்ணு குப்தா உள்ளிட்டோர் டெல்லி காவல் துறையில் புகார் செய்துருந்தனர்.

இதுபோல பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக உத்தரகண்ட், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குகள் என்பது பதிவுசெய்யப்ட்டுள்ளது. இந்த வழக்குகள் எதிராக இயக்குனர் லீனா மணிமேகலை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துருந்தார். அதில் குறிப்பாக இந்த வழக்குகளால் கைது செய்யப்பட கூடும் என்றும் தனக்கு லுக்கோ நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி முன் விசாரணைக்கு வரப்பட்டது, லீனா மணிமேகலை மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் அவருடைய மனுதொடர்பான பதிலளிக்க மத்திய அரசு, டெல்லி, உத்திர பிரதேசம், உத்திரகாண்ட, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உத்தரவிட்டு இந்த விவகாரம் தொடர்பாக அவர்க்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கைது செய்ய இடைக்கால தடையை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: