சபரிமலை நடை அடைப்பு, மீண்டும் பிப்ரவரி 12ல் திறக்கப்படும்: மேல்சாந்தி ஜெயராமன்

கேரள: மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவ. முதல் நேற்றிரவு வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் வரும் பிப்.12-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். பிப்.12 முதல் பிப்.17-ம் தேதி வரை நாட்கள் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும் என்று மேல்சாந்தி ஜெயராமன் கூறியுள்ளார்.

சபரிமலை  ஐயப்பன் கோயிலில் நாளை காலை நடை சாத்தப்படுகிறது. இன்று இரவு வரை  மட்டுமே பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு.  மீண்டும்  மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருட மண்டல,  மகரவிளக்கு காலம் இறுதிக் கட்டத்தை அடைந்து உள்ளது. கடந்த 14ம் தேதி  மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் முடிவடைந்த பின்னரும் பக்தர்களின்  வருகை குறையாமல் உள்ளது. இதற்கிடையே 14ம் தேதிக்குப் பின்னர் கடந்த 3  தினங்களாக சராசரியாக 75 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம்  செய்துள்ளனர்.

மண்டலபூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் தேதி திறக்கப்பட்டது. 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. தினசரியும் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: