குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை

சென்னை: குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. முப்படை, தேசிய மாணவர் படை, ஒன்றிய தொழிற் பாதுகாப்பு படை, காவல், தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நடைபெற்று வருகிறது. அணிவகுப்பு ஒத்திகை, குடியரசு தின விழா காரணமாக இன்று. 22,24,26-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் 20 துறைகளை சேர்ந்த வாகனங்கள் இந்தாண்டு குடியரசு தின விழாவில் இடம் பெறுகின்றன. மெட்ரோ பணியால் இந்தாண்டு காந்தி சிலைக்கு பதில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறுகிறது.

Related Stories: