கொருக்குப்பேட்டை ரயில்வே கிராசிங்கில் மேம்பால பணி நாளை முதல் 3 ஆண்டு போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: கொருக்குப்பேட்டை ரயில்வே கிராசிங்கில், போக்குவரத்து மேம்பால கட்டுமான பணி நடைபெறுவதால் நாளை முதல் 2025 ஜனவரி 20ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: மாதவரம் மார்க்கத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் மாற்று வழிப்பாதையாக ஜிஎன்டி ரோடு எத்திராஜ் சாமி சாலை- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை - குப்பைமேடு X டிவிகே லிங்க் ரோடு முல்லை நகர் மேம்பாலம்- முல்லை நகர் சந்திப்பு-மூலக்கொத்தளம்-சி.பி பாலம் (காகன் பாலம்) - கொருக்குப்பேட்டை பாலம்- கத்திவாக்கம் நெடுஞ்சாலை- ஆர்.கே.நகர் X மணலி சாலை சந்திப்பு அடைந்து தங்கள் பகுதிக்கு செல்லலாம்.

கொருக்குப்பேட்டை மார்க்கத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் மாற்று வழிப்பாதையாக ஆர்.கே.நகர் X மணலி சாலை சந்திப்பு-கத்திவாக்கம் நெடுஞ்சாலை- கொருக்குப்பேட்டை பாலம்- சி.பி பாலம்-மூலக்கொத்தளம்-வியாசர்பாடி மேம்பாலம்- முத்து தெரு- மூர்த்திங்கர் தெரு- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை- மேற்கு நிழற்சாலை- மத்திய நிழற்சாலை- முல்லை நகர் சந்திப்பு- முல்லை நகர் மேம்பாலம்- குப்பைமேடு X டிவிகே லிங்க் ரோடு, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை - எத்திராஜ் சாமி சாலை- ஜிஎன்டி ரோடு அடைந்து தங்கள் பகுதிக்கு செல்லலாம்.

மாதவரம் மார்க்கத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்று இருவழி பாதையாக, மாதவரம் ரவுண்டானா- 200அடி சாலை- எம்எப்எல் ஜங்ஷன் மணலி எக்ஸ்பிரஸ் சாலை- எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலையை அடைந்து தாங்கள் விரும்பிய பகுதிக்கு செல்லலாம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை  மாற்று இருவழிப்பாதையாக மாதவரம் ரவுண்டானா- ஜிஎன்டி ரோடு -எத்திராஜ்சாமி சாலை- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை - குப்பைமேடு X டிவிகே முல்லை நகர் மேம்பாலம்- முல்லை நகர் சந்திப்பு- வியாசர்பாடி மேம்பாலம்- பி.பி டாப்-மூலக்கொத்தளம்- மின்ட் சந்திப்பு- மின்ட் மேம்பாலம்- திருவொற்றியூர் நெடுஞ்சாலை சென்று விரும்பிய பகுதிக்கு செல்லலாம்.

கொருக்குப்பேட்டை மார்க்கத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்று இருவழி பாதையாக, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை- மணலி எக்ஸ்பிரஸ் சாலை- எம்எப்எல் 200அடி சாலை- மாதவரம் ரவுண்டானா- அடைந்து தாங்கள் விரும்பிய பகுதிக்கு செல்லலாம்.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை  மாற்று இருவழிப்பாதையாக திருவொற்றியூர் நெடுஞ்சாலை- மின்ட் மேம்பாலம்- மின்ட் சந்திப்பு-மூலக்கொத்தளம்- பி.பி.டாப், வியாசர்பாடி மேம்பாலம்- முல்லை நகர் சந்திப்பு-முல்லை நகர் மேம்பாலம்- குப்பைமேடு X டிவிகே லிங்க் ரோடு தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை - எத்திராஜ்சாமி சாலை- ஜிஎன்டி ரோடு மாதவரம் ரவுண்டானா செல்லலாம். கொடுங்கையூர் மார்க்கத்திலிருந்து வரும் மினி அரசு பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாற்று இரு வழிப்பாதையாக தொப்பை விநாயகர் கோயில் தெரு- - பக்கிங்காம் கால்வாய் சாலை-  ஐஓசி சாலை- எண்ணூர் நெடுஞ்சாலை அடைந்து   விரும்பிய பகுதிக்கு செல்லலாம்.

கொருக்குப்பேட்டை மார்க்கத்திலிருந்து வரும் மினி அரசு பேருந்துகள், இரண்டு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாற்று இரு வழிப்பாதையாக எண்ணூர் நெடுஞ்சாலை- ஐஓசி சாலை- பக்கிங்காம் கால்வாய் சாலை- தொப்பை விநாயகர் கோயில் தெரு- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை அடைந்து விரும்பிய பகுதிக்கு செல்லலாம். அனைத்து வாகன ஓட்டிகளும் மற்றும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: