கியூபா சந்திக்கும் பிரச்னைகள் புரட்சியாளர் சே குவேரா மகள் அலெய்டா கருத்து பகிர்வு

சென்னை:  புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா சே குவேரா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின், அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க திருவனந்தபுரம் வந்தார். இதன் பின்னர் நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்தார்.  அவருக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தலைமையில் சென்னை விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தலைமை அலுவலகத்துக்கும், தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்துக்கும் சென்றார்.  இந்நிகழ்ச்சியில் கியூபா சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

Related Stories: