இந்தியர்களுக்கு விசா காத்திருப்பு காலத்தை குறைக்க நடவடிக்கை

வாஷிங்டன்: கொரோனா தொடர்பான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விலக்கி கொண்ட பிறகு இந்தியா உள்பட சில நாடுகளில் இருந்து விசா கோரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கடந்தாண்டில் பி1(வர்த்தகம்) மற்றும் பி 2(சுற்றுலா) உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவு விசாக்களுக்கான காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள் வரை ஆகியது. இது குறித்து அமெரிக்காவின் விசா சேவை பிரிவு அதிகாரி ஜூலி ஸ்ட்ப்ட் வாஷிங்டனில் அளித்த பேட்டியில்,‘‘ விசாவுக்கு காத்திருப்பு காலத்தை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க துாதரகங்களில் அதிக பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். ஊழியர்கள் ஷிப்டு முறையிலும் வார விடுமுறை நாட்களிலும் பணியாற்றி வருகின்றனர். பணிபுரிவதற்கான எச்-1 பி மற்றும் எல் 1 விசா ஆகியவற்றுக்கு நேர்முகத்தேர்வுக்கான காத்திருப்பு 18 மாதங்களில் இருந்து 60 நாட்களாக குறைந்துள்ளது’’ என்றார்.

Related Stories: