ஊழல் புகாரால் நெருக்கடி வியட்நாம் அதிபர் ராஜினாமா

வியட்நாம்: வியட்நாம் நாட்டின் பிரதமராக கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை நுயென் சுவான் புக் (68) இருந்தார். தற்போது அவர் நாட்டின் அதிபராக செயல்பட்டு வருகிறார். இவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் பல்வேறு ஊழல்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் அதிபர் பதவியில் தொடரக் கூடாது எனக்கூறி தற்போது ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே அதிபராக பதவி வகித்த நுயென் சுவான் புக், ஊழல் புகாரால் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவரது ராஜினாமாவை ெதாடர்ந்து நாட்டின் அடுத்த அதிபர் யார் என்பது குறித்து ஆளுங்கட்சி தரப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Stories: