போர்களால் பாடம் கற்றுக் ெகாண்டோம் இந்தியாவுடன் உண்மையான பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் விருப்பம்

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரம், எல்லை தாண்டிய தீவிரவாதம் காரணமாக இந்தியா -பாகிஸ்தான் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மூன்றாம் தரப்பினர் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா முன்பு நிராகரித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் துபாயை சேர்ந்த செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் போன்ற பற்றி எரியும் பிரச்னைகள் குறித்து தீர்வு காண்பதற்கு இரு நாடுகளும் தீவிரமான மற்றும் உண்மையான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்.  இந்தியாவுடன் மூன்று போர்கள் ஏற்பட்டுள்ளன.

அவை மக்களுக்கு அதிக துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே கொண்டு வந்தது. இதன் மூலம் நாங்கள் பாடத்தை கற்றுக்கொண்டோம். எங்களது உண்மையான பிரச்னைகளை எங்களால் தீர்க்க முடிந்தால் நாங்கள் அமைதியாக வாழ விரும்புகிறோம். இது தான் பிரதமர் மோடிக்கு நான் தெரிவிக்க விரும்பும் செய்தியாகும்.  

இவ்வாறு பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related Stories: