எட்டயபுரம் சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடு விற்பனை

எட்டயபுரம்: தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையும் ஒன்று. இங்கு மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை தென்காசி, நாகர்கோவில், தேனி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருவது வழக்கம். பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலகட்டங்களில் ரூ.6 கோடி முதல் ரூ.7 கோடி வரை இங்கு ஆடுகள் வியாபாரம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் நேற்று முன்தினம் இரவு முதல் ஆடுகள் விற்பனை களைகட்டியது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தது. 6,500 ஆடுகளுக்கும் மேல் விற்பனையாகி உள்ளது. எடைக்கு ஏற்ப ரூ.7 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. ரூ.6 கோடிக்கும் மேல் விற்பனை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: