முதலீடுகள் இன்றைக்கு பெருமளவிலே தென் மாவட்டத்திற்கு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருமங்கலம் ஆர்.பி.உதயகுமார் (அதிமுக) பேசுகையில், “தென் தமிழகத்தினுடைய பகுதியிலே வேலைவாய்ப்புக்காகவும்,  தொழில் வளர்ச்சிக்காகவும் மதுரை-தூத்துக்குடி எக்னாமிக் காரிடர்  அமைக்க  மானியம் கொடுக்கப்பட்டு, அதற்கான இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  அரசாணையும் வெளியிடப்பட்டது. அந்தத் தொழில் முதலீட்டுக்காக தற்போது அரசு  ஏதேனும் தனிக்கவனம் செலுத்துகிறதா; அந்த அரசாணையை செயல்படுத்துவதற்கு அரசு  முன்னுரிமை வழங்குமா?’’ என்றார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு: முதல்வர் மு.க.ஸ்டாலின்  பொறுப்பேற்று கொண்டதற்கு பிறகு, இந்த தொழில் முதலீடுகள் என்பது ஒரு  சமச்சீர் தன்மை வாய்ந்ததாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக வர வேண்டும். அதேபோல  தொழில் வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் மாத்திரம் வரக்கூடாது.  எல்லா இடங்களுக்கும் வர வேண்டும். இன்றைக்கு தொழில் வளர்ச்சிக்கு  முக்கியத்துவம் கொடுத்து, வரக்கூடிய முதலீடுகள் பெருமளவிலே  தென் மாவட்டத்திற்கு வருவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.   தூத்துக்குடிக்கும், மதுரைக்கும் இடையே இருக்கின்ற இந்த தொழில் வழித்தடம்  பல தொழிற்சாலைகள் வருவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: