கூட்டுறவு வங்கியின் சர்வரை ஹாக் செய்து ரூ.2.61 கோடி திருடிய 2 நைஜீரியர்கள் டெல்லியில் கைது: ரூ.1.05 கோடி மீட்டது போலீஸ்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மண்ணடியில் உள்ள மாநில கூட்டுறவு வங்கியின் அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் புகார் ஒன்று அளித்தனர். அந்த புகாரில், கடந்த ஆகஸ்ட் மாதம் எங்கள் வங்கி கணக்கை ஹாக் செய்து, பல்வேறு தவணைகளில் ரூ.2.61 கோடி பணம் திருடப்பட்டுள்ளது. அதை மீட்டு தர ேவண்டும் என்று புகாரில் கூறி இருந்தனர்.

அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், மாநில கூட்டுறவு வங்கியின் சர்வர்களை ஹாக் செய்து அதன் மூலம் 32 வங்கி கணக்குகளில் இருந்து 41 முறை ரூ.2.61 கோடி பணத்தை திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், இவர்கள் டெல்லியில் இருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்தது.

பின்னர் தனிப்படை போலீசார் கடந்த 8ம் தேதி டெல்லியில் பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த எக்கேன் காட்வின்(37), அகஸ்டின்(42) ஆகியோரை டெல்லி போலீசார் உதவியுடன் கைது செய்தனர். பிறகு 2 நைஜீரியர்களையும், அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். இந்த மோசடி பணத்தை நைஜீரியர்கள் பரிமாற்றம் செய்து இருந்த 15 வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி ரூ.1.05 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், 2நைஜீரியர்கள்சிறையில் அடைத்தனர்.

Related Stories: