அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமி காதல் திருமணமா?: போட்டோவால் பரவும் தகவல்

சென்னை: தமிழில் விஷால் ஜோடியாக ‘ஆக்‌ஷன்’ படத்தில் அறிமுகமானவர், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. நிஜ டாக்டரான அவர், பிறகு தனுஷ் ஜோடியாக ‘ஜகமே தந்திரம்’, மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம், விஷ்ணு விஷால் ஜோடியாக ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். சாய் பல்லவி நடித்த ‘கார்கி’ படத்தை தயாரித்து நடித்திருந்தார். கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்த ஹீரோயினாக மாறிய அவர், தற்போது மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘கிறிஸ்டோபர்’, துல்கர் சல்மானுடன் ‘கிங் ஆஃப் கோதா’, தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ 2ம் பாகம், பிரியா.வி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமி நேற்று முன்தினம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு போட்டோ வைரலானது.

‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘அந்தகாரம்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவரும், வசந்தபாலன் இயக்கும் ‘அநீதி’ படத்தின் ஹீரோவுமான அர்ஜூன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை, சிவப்பு நிற ஹார்ட் எமோஜியுடன் ஐஸ்வர்யா லட்சுமி பதிவிட்டுள்ளார். இதனால், அவர்கள் ரகசியமாக காதலிப்பதாக தகவல் பரவி வருகிறது. இதையடுத்து ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஐஸ்வர்யா லட்சுமி கூறும்போது, ‘அர்ஜூன் தாஸும், நானும் நல்ல நண்பர்கள் மட்டும்தான்’ என்றார். ஆனால், அர்ஜூன் தாஸை காதலிப்பதை தொடர்ந்தே இந்த போட்டோவை ஐஸ்வர்யா லட்சுமி பதிவிட்டுள்ளார் என்று திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Stories: