சென்னை: மூத்த பத்திரிகையாளரும், இலக்கியவாதியுமான துரைபாரதி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தமிழில் புலனாய்வு இதழியலின் முன்னோடியாக விளங்கி பல இதழியலாளர்களை உருவாக்கியவர் துரைபாரதி எனவும் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; மூத்த பத்திரிகையாளர் திரு. துரைபாரதி (வயது 67) அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். துரைபாரதி அவர்கள் நக்கீரன் இதழின் முதல் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
