சாதக, பாதகங்களை ஆராய்ந்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் பன்னீர்செல்வம் பேச்சு

சாதக, பாதகங்களை ஆராய்ந்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் பேரவையில் பேசியுள்ளார். திட்டத்தை ஜெயலலிதா ஆதரித்து விட்டு பின்னர் எதிர்த்தார் என முதல்வர் கூறியதற்கு பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். முதலமைச்சரின் தீர்மானத்தின் அடிப்படையில் சாதகங்களை பேசி வலு சேர்க்க வேண்டும், ஆதரவு கேட்க வேண்டும், கடந்த காலங்களில் பல்வேறு கருத்துக்கள் அரசியல் கட்சியினர் தெரிவித்திருப்பார்கள் அதை பேசுவதற்கு இது நேரமல்ல திட்டத்துக்காக மணலை எடுக்கும்போது நகரும் என்பதால் பாதுகாப்பாக வெட்ட வேண்டும் என ஜெயலலிதா அவர்கள் கூறியுள்ளார்கள்.  

Related Stories: