அமெரிக்காவில் உள்நாட்டு விமான சேவை முற்றிலும் முடக்கம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் தொழில்நுட்ப கோளாறினால் உள்நாட்டு விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் நிர்வாகத்தின் கணினி பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் நாடு முழுவதும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப் பூர்வ தகவல் தெரிவிக்கிறது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜீன் பியரி தனது டிவிட்டரில் ``இது சிஸ்டத்தை ஹேக் செய்தது போல தெரியவில்லை என்றாலும், இது குறித்த உடனடி விசாரணைக்கு பைடன் உத்தரவிட்டார்,’’ என்று கூறியுள்ளார்.

இதனால் நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையக் கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. உள்நாட்டு விமான சேவையை நிறுத்தும்படி விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரச்னை என்னவென்று ஆராய்ந்து நிர்வாகம் அதனை சீர்செய்து வருவதாக விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: